கண்ணதாசனின் அனுபவங்கள்

இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்கள் ஆனால் நம் கவிஞரோ அதை அனுபவித்து மக்கள் தமிழில் எழுதியவர். இன்னும் பல ஆண்டு கழித்து இந்த கவிதையை படித்தாலும் புதியதாய் படிப்பது போல் தோன்றும்.


கண்ணதாசனின் கவிதை

இதோ இந்த கவிதை


பிறப்பின்  வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து  பாரென இறைவன் பணித்தான் !

படிப்பெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான் !

அன்பெனப் படுவது என்னெனக்   கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக்  கேட்டேன்!
மணந்து பாரென  இறைவன் பணித்தான் !

பிள்ளை என்பது யாதெனக்  கேட்டேன்!
பெற்றுப் பாரென  இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென  இறைவன் பணிந்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென  இறைவன் பணித்தான் !
 
இறப்பின்  பின்னது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென  இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!


மீண்டும் இன்னொரு பதிவில் காண்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்