அண்ணாவின் நட்பு

3 comments


கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தில் அண்ணா ஒரு முக்கியமான நபர். அண்ணாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ அவ்வளவு சண்டையும் போட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகம் என்பது அண்ணாவிற்கு தாய் வீடு போன்றதாகும்.பலமுறை சண்டைபோட்டு பிரிந்துள்ளார்.1962 அண்ணாவிடம் சண்டையிட்டு கட்சியை விட்டு வெளிவந்த சமயம் "படித்தால் மட்டும் போதுமா" படத்தில் ஒரு பாடலில் அண்ணாவுடன் கொண்ட பிரிவையும் ஏமாற்றத்தையும் வெளிபடுத்துவார்.



Kannadasan Songs


அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையை கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்து கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்

கொடுத்துதருள்வாய் என வேண்டிநின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்தெடுத்தாய்
அடைக்கலாமென்றே நினைத்திருந்தேன்
அனைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்

இந்தப் பாடலில் அண்ணா தனக்கு துரோகம் செய்து விட்டதுபோல் எழுதியிருப்பர். ஆனால் இந்தப் பாடல் பாடலின் சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். அதே ஆண்டு (1962) வெளிவந்த இன்னொரு திரைப்படம் "நெஞ்சில் ஓர் ஆலயம்" அதில் ஒரு பாடலில் அண்ணா எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று எழுதியிருப்பார்.

எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம்
 அமைதியில் வாழ்க

இன்னொரு சமயம் அண்ணா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த சமயம் "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜியின் உடல் நலத்தை பத்மினி விசாரிப்பது போன்ற பாடல்.அண்ணாவை மனதில் வைத்து அவரின் உடல் நலத்தே விசாரிப்பது போன்று எழுதப்பட்ட பாடல் இந்தப்பாடல்


Kannadasan Songs


நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா..
நலம் பெற வேண்டும் நீ என்றே
நாளும் ஏன் நெஞ்சில் நினைவுன்டு

இலை மறை காய்போல் பொருள்கொண்டு
எவரும் அறியாமல் சொல்கின்றேன்
கண் பட்டதோ உன் மேனியிலே
புண் பட்டத்தோ நானறியேன் 

புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யார் அறிவார்.

இவ்வாறு அண்ணாவின் உடல்நிலையை பற்றி உருக்கமாக விசாரிப்பர்.

மீண்டும் இன்னொரு பதிவில் அண்ணாவுடன் கொண்ட நட்பை காணலாம்.

கண்ணதாசனும் காமராஜரும் - பாகம் 2

0 comments


சென்ற பதிவில் காமராஜருடன் கொண்ட நட்பையும் அவருக்காக அவர் எழுதிய பாடலையும் பார்த்தோம்.காமராஜர் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே கண்ணதாசன் விரும்பினார்.

பட்டிக்காட பட்டணமா  என்ற படத்தில் ஒரு பக்தி பாடல்

அம்பிகையே ஈஸ்வரியே எனை
ஆழவந்த கோவில் கொண்ட முத்துமாரி என்ற பாடலில்
காமராஜர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அழகாக பக்திப் பாடலில் வெளிபடுத்தியிருப்பார். 


 படம் : பட்டிக்காட பட்டணமா 
 சூழ்நிலை : பக்திப் பாடல்


Kannadasan Songs


அம்பிகையே ஈஸ்வரியே எனை
 ஆழவந்த கோவில் கொண்ட முத்துமாரி
 சிவகாமியின் உமையவளே முத்துமாரி
 உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

 மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துகூறி
 இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டையேறி
 ஏழைகளை எச்சதில்லை முத்துமாரி
 நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

 வாயை வைத்து வாழுகிறோம் முத்துமாரி
 இனி வருங்காலம் எங்களுக்கு முத்துமாரி.

இந்த பாடலில் சிவகாமியின் உமையவளே என்பது காமராஜரின் தாயை குறிக்கின்றது.இதில் கோட்டை என்ற சொல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்வதாகும்.


படிக்காத மேதை படத்தில் இன்னொரு பாடலில் படிக்கவில்லை என்றாலும் ஒருவரால் சிறந்து விளங்க முடியும் என்பது போல் வரும் அந்த பாடல் காமராஜரை நினைத்து எழுதிய பாடலாகும்.


Kannadasan Songs


படிப்பினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுன்டு
கொடுப்பதற்கும் பிரிபதற்கும் படிப்புவேண்டுமா - என்றும்
குழந்தைபோல் வாழ்ந்துவிட்டல் துன்பம்தோன்றுமா

இவ்வாறு காமராஜரிடம் நட்பு கொண்ட கண்ணதாசன் அவர் இறப்புக்கு பின் மனதால் வருந்தி எழுதிய கவிதை

சொத்து சுகம் நாடார் ,
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்,
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையும் நாடார்,
ஆசைதனை நாடார்,
நாடென்றே நாடித் - தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.


இவ்வாறு காமராஜரிடம் கொண்ட நட்பை தன் பாடலில் வெளிபடுத்தியவர் கண்ணதாசன்.


மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

கண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1

1 comments

இந்த பதிவில் கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தை பற்றிக் காணலாம். அவர் எவ்வளவோ கட்சியில் இருந்துள்ளார்.அரசியில் பிரவேசம் அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அவர் இல்லாத கட்சிகளை இல்லை எனலாம்.நம் கவிஞர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பாடலில் எழுதுவதில் வித்தகர்.

அந்த பாடலின் சூழ்நிலையை மறந்து இவர் வாழ்க்கை சம்பவத்தை மட்டும் நினைத்து அந்த பாடலை பார்த்தல் அந்த பாடல் மிகவும் சுவாரஸ்யமாக புதிய வடிவில் தெரியும். கவிஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளி வந்த சமயம் அவருக்கு "பட்டினத்தில் பூதம்" படத்தில் ஒரு பாடல் எழுத நேர்ந்தது.ஒரு காதலி காதலனை பார்த்து பாடுவதாக அமைந்த அந்த பாடல்.ஒரு காதல் பாடல்தான் ஆனால் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கருத்துக்களை அதில் படைக்கின்றார். 


காமராஜர்

அவர் காங்கிரசிலிருந்து வெளியேறினாலும் காமராஜர் மீதும் அவருடைய ஆளுமை மீதும் தீராத மரியாதையை உடையவர். அதை அந்த பாடலில் வெளிபடுத்துவார்.காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. காமராஜருக்கு சொல்ல வேண்டிய செய்தியை அந்தப் பாடலில் குறிப்பால் உணத்துவார். அந்தப் பாடலில் நான் ரசித்த வரிகள் 


Kannadasan Songs


படம் : பட்டினத்தில் பூதம்
சூழ்நிலை : டூயட் பாடல்



அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடு நான்பேச வார்த்தையேதடி
வேலன் இல்லாமல் தோகையேதடி ...

நிலையில் மாறினால் நினைவும் மாருமோ 
நெஞ்சங்கள் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ 
மாறாது மாறாது இறைவன் ஆணை...


இந்த பாடல் முருகனை புகழ்ந்து எழுதுவது போன்று அமைய வேண்டிய பாடல்.ஆனால் அவர் தன்னுடைய நிலையையும் அழகாக விளக்கியிருப்பார்.

இதே போல் இன்னொரு சமயம் காமராஜர் ஒரு கருத்தரங்குகாக "United Nations" இருந்து அழைக்கப்பட்டிருந்தார்.காமராஜர் படிப்பறிவில்லாதவர் அதனால் எப்படி அங்கு செல்ல முடியும் என பலர் நினைத்தனர் ஆனால் அவருடைய தாழ்வு மனப்பான்மையை போக்கி அவருக்கு ஊக்கம் அளிப்பது போன்ற பாடலை "மாகாகவி காளிதாஸ்" படத்திற்காக எழுதியிருப்பார்.

இந்தப் பாடல் படத்தின் சூழ்நிலைக்கும் பொருந்தும் அதை போல் காமராஜரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாக அமைந்த அந்த பாடலில்

Kannadasan Songs


 நான் ரசித்த வரிகள்

சென்று வா மகனே ! சென்றுவா ! - அறிவை
வென்று வா மகனே ! வென்று வா !
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும்
அறியாதவன் என்றே நினைக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றது - அங்கே
ஆணவம் புன்னகை புரிகின்றது
உண்மையை சொல்வதற்கு படிப்பெதற்கு ? - எல்லாம்
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு ?!

கண் கண்ட காட்சி கட்கு விளக்கெதற்கு ? நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு ? !

காமராஜருக்கு சொல்ல நினைத்ததை அழகாக இந்த பாடலில் எழுதியிருப்பார்.

அடுத்த பதிவில் வேறு சில பாடல்கள் உருவான விதத்தை விளக்குகின்றேன். மீண்டும் சந்திப்போம்.

கோவையை பற்றி கண்ணதாசன்

0 comments


கண்ணதாசன் எல்லாவற்றையும் அனுபவித்து எழுதும் அற்புத கவிஞர். அவர் கோயம்புத்தூர் மக்களின் பண்பு,பேச்சுவழக்கு ,விருந்தோம்பலை பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார்.
கோவை மக்கள் எப்போதும் மரியாதையுடன் பேசுவார்கள்.அவர்களின் பேச்சு வழக்கில் மரியாதை மிக அதிகமா இருக்கும்.உதாரணமாக வாங்க,போங்க,உட்காருங்க,சாப்பிடுங்க,தூங்குங்கா,வேணுங்க,ஆமாமுங்க என்பவை.உணவு உபசரிப்பிற்கும் மிகவும் பெயர் பெற்ற ஊர் கோயம்புத்தூர்.


கண்ணதாசனின் கவிதை

 நான் ரசித்த அந்த கவிதை

சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம் பனிவெல்லம் கோவையில்தான்
ஏனுங்க என்னவுங்க ஆமாவுங்க
மானுங்க இருக்குங்க வேணுங்களா

புடுச்சுங்க மலப்பழமும் இருக்குங்க
எடுத்துக்குங்க தேனுங்க கையெடுங்க
சாப்பிடுங்க திருப்பூர் நெய்யுங்க சுத்தமுங்க
ஏனுங்க எழுந்தீங்க உட்காருங்க

ஏபய்யா பாயசம் எடுத்துப்போடு 
அப்பப்பா கோவைக்கு விருந்துவந்தால்
ஆறுநாள் பசியும் வேண்டும்
வயிறும் வேண்டும் தப்பப்பா

கோவைக்கு வரக்கூடாதே
சாப்பாட்டாலே சாகடிப்பார்.

இந்த கவிதையில் கோவை தமிழை அழகாக எழுதியிருப்பார்.

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

கண்ணதாசனின் அனுபவங்கள்

0 comments

இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்கள் ஆனால் நம் கவிஞரோ அதை அனுபவித்து மக்கள் தமிழில் எழுதியவர். இன்னும் பல ஆண்டு கழித்து இந்த கவிதையை படித்தாலும் புதியதாய் படிப்பது போல் தோன்றும்.


கண்ணதாசனின் கவிதை

இதோ இந்த கவிதை


பிறப்பின்  வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து  பாரென இறைவன் பணித்தான் !

படிப்பெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான் !

அன்பெனப் படுவது என்னெனக்   கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக்  கேட்டேன்!
மணந்து பாரென  இறைவன் பணித்தான் !

பிள்ளை என்பது யாதெனக்  கேட்டேன்!
பெற்றுப் பாரென  இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென  இறைவன் பணிந்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென  இறைவன் பணித்தான் !
 
இறப்பின்  பின்னது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென  இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!


மீண்டும் இன்னொரு பதிவில் காண்போம்.

திரையிசையில் முதியோர் காதல்

0 comments

காதல் ஒரு மந்திரச்சொல்.இயற்கையின் உபாதை.சொர்கத்தின் திறவுகோல். ஆர்மோன்களின் பனிப்போர்..மலிவாய் கிடைக்கும் போதை.நம் யுவன் யுவதிகளுக்கு எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம் ஆனால் 30 ஆண்டுக்கலாம் வாழ்ந்த தம்பதிகளுக்கு இது ஒரு தவம்.
தள்ளாத வயதில் கட்டிலோடு கட்டிலாக நோயோடு உறவாடும் முதியவரின் காதலில் நான் ரசித்த வரிகள் ....

முதியோர் காதல்
.
கண்ணதாசன் : கண்ணதாசன் மனைவிக்கு காது கேட்காது. மனைவியை பற்றி அவர் எழுதிய வரிகள்...

செவிகள் பழுதனாலும் தன் சேவை திறத்தல்
என் கவிகள் பழுதாகாமல் காத்து வந்த ராசாத்தி...

அவர் ஆடாத ஆட்டம் இல்லை.அவர் ஊரெல்லாம் சுற்றி மது மற்றும் மாதுவில் சரணடைத்து கடைசியில் நோயுற்று எழுதிய வரிகள்.

கட்டிலும் மெத்தையிலும் காலமறியாதிருந்து
கற்பனைகள் கொண்டதொரு காலம்
இன்று நோய்வழியில் வந்ததடி ஞானம்...

முத்தமென்றும் மோகமென்றும் சத்தமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டு புத்திகெட்டு போனது -ஒருகாலம்
இன்று ரத்தமற்று போனபின்பு ஞானம்...

பொன்னிநதி அவ்வளவும் போனரத்தம் போனபின்பு
கன்னியரை யேசுதடி நெஞ்சம் இது
காலிடறி யானை விழும் பள்ளம் ....

வாழ்க்கையில் ஓயாது வேலை செய்து கடைசியில் எல்லா உறவையும் இழந்து தள்ளாத வயதில் தன் மனைவியுடன் பாடுவது போல் அமைந்த வரிகள் ... மனைவியின் அருமையை உணரும் வரிகள். "வியட்நாம் வீடு" படத்தில் வரும் வரிகள்...

முதியோர் காதல்
கால சுமைதாங்கி போலே மார்பில் எனைதாங்கி
வீழும் கண்ணீர் துடைத்தாய் அதில்
ஏன் விம்மல் தணியுமடி

 ஆழம் விழுதுகள்போல் உறவு ஆயிரம்
 இருந்தும் என்ன வேறென நீயிருந்தாய்
 அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்

தன் மனைவி இறப்புக்கு பின் கணவனின் நிலையை விளக்கும் வரிகள்...

தந்தை வாழ்வு முடிந்துபோனால்
தாயின் மஞ்சள் நிலைபதில்லை

தாயின் வாழ்க்கை முடிந்துபோனால்
தந்தைக்குகென்று வாழ்க்கை ஒன்றுமில்லை ..

வைரமுத்து - தன் வெற்றிக்கு மனைவிதான் காரணம் என்பதை திருக்குறள்போல் வைரமுத்து எழுதிய வரிகள்


காரியம் யாவும் என்கண்மணி பார்ப்பதால்
சூரிய கவிஞராய் சுற்றி வருகிறேன் ..

மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம்.

கண்ணதாசன் - சுயவிமர்சனம்

1 comments

 ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம்  செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்து எளிதிய பாடல்களைவிட அனுபவித்து எழுதியவை மிக அதிகம்.அவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்தவற்றில்  
 நான் ரசித்த வரிகள்.

kanadhasan


நானிடறி விழுந்தயிடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்னென்று நான்
கூவி விற்ற பொருள்
நல்ல பொருளில்லை அதிகம்
நல்ல பொருளில்லை அதிகம்..."
 
கண்ணதாசன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம். அவர் ஒரு சகாப்தம்.அவர் ஒரு தமிழ் அகராதி. அவர் நம் வாழ்க்கையின் அனுபவம்.


ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிறிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...


மேலே உள்ள வரிகளை எழுதியது ஏதோ சாதரண கவிஞன் அல்ல. வெறும் பத்து பாடல்களை எழுதி மறைந்த ஒரு பாமர கவிஞன் அல்ல. 5000 பாடல்களையும் 6000 கவிதைகளையும் படைத்த ஒரு அசுரன். அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 232.

அவரின் சுயசரிதை புத்தகங்கள்


  • எனது வசந்த காலங்கள்
  • எனது சுயசரிதம்
  • வனவாசம்
  • மனவாசம்


கண்ணதாசன்,சுயவிமர்சனம்


ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்துடிப்பு ...

காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருன் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன் ...

நான் மானிட ஜாதியில் ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை...


அவருடைய "சேரமான் காதலி" சாகித்திய ஆகாடமி விருது பெற்றது.முதல் முதலில் பாடலுக்காக தேசிய விருது பெற்ற உன்னத கவிஞன்(1968). தமிழ் நாட்டின் முதல் அரசவை கவிஞன். அவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் உலகப்  புகழ் பெற்றவை.




விருந்தோம்பல் (குடும்ப விளக்கு)

0 comments

நம் தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளை போலவே மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட முக்கிய பண்பு விருந்தோம்பல்.Pizza மற்றும் buffet கலாச்சாரத்திற்கு மாறி விட்ட நம்மால் இதை பெரியதாக உணர முடியாது.நாம் தொலைத்து விட்ட அடையாளங்களில் ஓன்று விருந்தோம்பல்.

நம் கலாச்சாரத்தை,தமிழரின் வாழ்க்கையை விளக்கும் நூல்/பதிவு
குடும்ப விளக்கு.விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று பாரதிதாசன் விளக்குகிறார்.

இதை நான் விருந்தோம்பலின் இலக்கணமாகப் பார்க்கிறேன்.

Bharathidasan,kudumba vilakku


வாழை இலையின்அடி உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்திக் கறிவகைகள் - சூழவைத்துத்

தண்ணீர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன் மிகஇனிக்கும் - பண்ணியமும்

முக்கனியும் தேனில் நறுநெய்யில் முழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால் சோறிட்டுத்-தக்கபடி

கேட்டும் குறிபறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே!-கேட்டுப்போ; 

     இந்த வரிகளில் எப்படி இலையை இடவேண்டும்,எப்படி பரிமாற வேண்டும் என்று விவரிக்கிறார்.தண்ணீரையும் வெண்ணீரையும் தனித்தனியே வைத்து சாப்பாடு இடுமுன் மிக இனிப்பான இனிப்பு வகைகளை இலையிலிட்டு முக்கனியை தேனிலும்,நறுநெயிலும் மூழ்கி வைக்கவேண்டும்.

   விருந்தினருக்கு உணவுபொருட்களை மறுபடியும் கேட்பதற்கு கூச்சமாக இருக்கும் அதற்காக விருந்து அளிக்கும்போது உணவிட்டு அங்கேயே நின்று உணவிடவேண்டும். விருந்தோம்பலில் முக்கியமான பண்பு குறிப்பறிந்து உணவுபறிமாறுதல்.

   கெஞ்சியும் மிஞ்சியும் என்ற வார்த்தையை பாரதிதாசன் கையாளுகிறார் அதாவதுஅவர்களை கெஞ்சியும் அவர்களை செல்லமாக மிரட்டியும் அவர்களுக்கு பிடித்தவற்றை பரிமாற வேண்டும்.


எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும் அள்ளிவை -விக்குவதை

நீமுன் நினைத்து நினைப்பூட்டு நீர்அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில் இட்டாலும் - தீமையம்மா

பாய்ச்சும் பசும்பயற்றுப் பாகுக்கும் நைய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு நீருக்கும் -வாய்ப்பாகத்

தூய சருகிலுறு தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு திர்ந்தே அவரஎழுமுன் - தாயே

அவர்கைக்கு நீர்ஏந்தி நெய்ப்பசை யகற்ற
உவர்கட்டி தன்னை உதவு - துவைத்ததுகில்
 
ஈரம் துடைக்கஎன ஈந்து,மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே ஒள்இலைகாய் சேரவைத்து
மேல்விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே!" 

உண்டாபின் அவர் கைக்கு நீர் எடுத்து கொடுக்க வேண்டும்.கையில் உள்ள நெய்பசை அகற்ற சோப்பு எடுத்து தர வேண்டும்.ஈரத்தை துடைக்க துவைத்த துணியை கொடுக்க வேண்டும்.வெற்றிலையும் பாக்கும் ஒன்றாக வைத்து விசிறி விசிற  வேண்டும்.இவையாவும் விருந்தோம்பலின் இலக்கணாமாகப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.இதை கடைபிடிக்க நாம் முயற்சிப்போம்.

 
  • தமிழ் ஆவணம்